தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். இவர் கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தன்னுடைய மகன்களின் புகைப்படத்தை இதுவரை நயன்தாரா வெளி உலகத்திற்கு காண்பிக்காமல் வைத்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தன்னுடைய மகன்களை அழைத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram