இந்தியாவில் நவராத்திரி விழா என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்து கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று. உண்மையில் ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இதில் சைத்ர நவராத்திரி, ஷரதிய நவராத்திரி, குப்த நவராத்திரி. பொதுவாக நவராத்திரியின் போது ஒன்பது நாட்கள் துர்க்கையின் 9 வடிவங்கள் வழிபடப்படுகிறது. அதே சமயம் நவராத்திரியிலிருந்து சுப காரியங்களும் தொடங்குகின்றன. இந்த வருடம் அக்டோபர் 15 ஆம் தேதி ஷரதிய நவராத்திரி தொடங்குகின்றது.

இது அக்டோபர் 24 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நவராத்திரியின் போது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடுவது மிகவும் நல்லது. இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

 துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள்

1. அக்டோபர் 15ம் தேதி மா ஷைலபுத்ரி வழிபாடும்,

2. அக்டோபர் 16ம் தேதி பிரம்மச்சாரிணி வழிபாடும்,

3. அக்டோபர் 17ம் தேதி மா சந்திரகாண்டா வழிபாடும்,

4. அக்டோபர் 18ம் தேதி மா கூஷ்மாண்டா வழிபாடும்,

5. அக்டோபர் 19ம் தேதி மா ஸ்கந்தமாதா வழிபாடும் நடைபெறும்.

6. அக்டோபர் 20ம் தேதி காத்யாயனி வழிபாடும்,

7. அக்டோபர் 21ம் தேதி மா காலராத்திரி வழிபாடும்,

8. அக்டோபர் 22ம் தேதி மா சித்திதாத்திரி வழிபாடும்,

9. அக்டோபர் 23ம் தேதி மகாகௌரி வழிபாடும்,

10. அக்டோபர் 24ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.