நவராத்திரி விழா ஒவ்வொரு வருடமும் புது புது மாற்றங்களுடன் கொண்டாடப்படக்கூடிய விழாவாகும். நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசுரனை அழிப்பதற்காக அம்மன் 9 நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெற்ற நிலையில் மகிஷம் என்றால் எருமை என்று பொருள். இது சோம்பல் மற்றும் அறியாமையின் சின்னமாகும். அறியாமையை அழித்து அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை திதியிலிருந்து ஒன்பது நாள் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த நாட்களில் நம்மை சூழ்ந்துள்ள அறியாமை என்ற இருள் விலகுவதற்கு அம்பிகையை இரவு நேரத்தில் பூஜை செய்து வழிபாடு செய்கிறோம். இருள் விலகி ஒளி பிறந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகின்றது.

ஒரு நாளில் பகல் என்பது சிவனின் அம்சமாகவும் இரவு என்பது அம்பிகையின் அம்சமாகவும் உள்ளது. பகலில் உழைக்கும் உயிரினங்களை இரவில் அம்பாள் தன்னுடைய மடியில் கிடத்தி தாலாட்டி உறங்க செய்கின்றாள். இரவு முழுவதும் விழித்திருக்கும் உலகை காக்கும் அம்பிகைக்காக ஒன்பதாவது நாள் இரவு மட்டும் திருவிழா கொண்டாடப்படுகின்றது. சொம்பன் மற்றும் நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகாவரம் பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை அவர்கள் பெற்றிருந்த நிலையில் தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர்.

இந்த நிலையில் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர் இந்த நவராத்திரி தேவதைகள் ரொம்ப நிசும்பர்களை ஒழித்தனர். அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும் நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர். இதுதான் நவராத்திரி எனப்படுகிறது. படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தான் தேவி. முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம பொருள் பராசக்தி. தினமும் அம்பிகையை வணங்கினாலும் புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை வழங்கும். புரட்டாசி மாத பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும். தேவியை நடுவில் வைத்து மற்ற உலகப் பொருள்களை எல்லாம் சுற்றிலும் வைப்பார்கள். இதற்கு காரணம் தேவியால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதை காட்டுகின்றது.