நவராத்திரி பெரும்பாலும் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் வருகின்றது. இது இலையுதிர் காலத்தில் இருந்து குளிர் காலத்திற்கு மாறக்கூடிய நேரம் ஆகும். இந்த சமயத்தில் பூமியின் வடக்கு கோலம் சூரியனை விட்டு விலகி இருக்கும் என்பதால் பகல் ஒளி என்பது குறைவாகவும் இரவு அதிகமாகவும் இருக்கும். அதனால் வடக்கு பகுதியில் குளிர் பரவும். சூரிய ஒளி பூமியில் படும் நேரம் குறையுமென்பதால் இந்த குளிரால் மனித உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும்.

இதிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு பயிற்சியாகவே இந்த நவராத்திரி விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்து புராணங்களின்படி அரக்கர்கள் அரசன் மகிஷாசுரன் 3 லோகங்களான பூமி, சொர்க்கம் மற்றும் நரகத்தை தாக்கிய தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நேரத்தில் அவனை வதம் செய்த மாபெரும் சக்தி தேவைப்பட்டது. அதற்கான காரணம் படைக்கும் கடவுளான பிரம்மா ஒரு பெண்ணால் மட்டுமே மகிஷாசுரனை வீழ்த்த முடியும் என்ற வரம் அளித்தார்.

இதனால் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் தங்களுடைய சக்திகளை ஒன்றிணைத்து அரக்கர்கள் அரசனான மகிஷாசுரனை வதம் செய்ய துர்கா தேவியை அதாவது பராசக்தியை உருவாக்கினார்கள். 15 நாட்கள் நீண்ட போருக்கு பிறகு பராசக்தி அவனை மாளைய அமாவாசை அன்று திரிசூலத்தால் வதம் செய்தார். அதற்குப் பிறகு 9 நாட்களுக்கு பராசக்தியை 9 வெவ்வேறு வடிவங்களில் மற்றும் அவதாரங்களில் வழிபட தொடங்கிய நிலையில் இதுவே நவராத்திரி கொண்டாட்டம் ஆகும்.