செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, 1947ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய அரசியல் சாசனத்தில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக கல்வி  கொடுக்கணும், கல்வி என்பது பொதுவாகிறது. கல்வி கொடுப்பது கட்டாயம் ஆகிறது.  அதுவும் கல்வி உரிமை சட்டம் வந்த பிறகு கட்டாயமாக கல்வி கொடுக்க வேண்டும்.  அப்படி இருக்கும் போது சாதியோடு…  சாதி ரீதியாக பள்ளிகள்  எதற்கு ? பள்ளி பெயர்களில் ஜாதி ரீதியிலான பள்ளிகள், மத ரீதியிலான பள்ளிகள் இதை எதற்கு தமிழ்நாடு அரசு அனுமதித்தது ?

இந்தியாவிலேயே அதிகப்படியான சாதி ரீதியான பள்ளிகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. ஒரு பிரச்சனை நடந்தால் இந்த அரசியலில் நீலி கண்ணீர் வடிக்கிறது. இந்த அரசு செய்யக்கூடிய தவறு என்ன ? கடந்த காலத்தில் என்ன   நடந்தது என்று தீர்வு காணாமல்…  ஒரு கமிஷன் போடுவது, கமிஷன் அறிக்கை வாங்குவது,  பேசாமல் விட்டுவிடுவது.

இவுங்களே  படம் எடுப்பாங்க. அந்த படங்களின் மூலம் தூண்டுவார்கள்.  அதை டென்ஷன் பண்ணுவாங்க, கதை எழுதுவாங்க. எல்லாம் பண்ணிட்டு கடைசில ஒரு கமிஷன் போட்டு பண்ணிட்டா என்ன பண்றது ? அதனால தமிழ்நாடு அரசு  இதற்க்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நான் குற்றம் சாட்டுகின்றேன்.  மணிப்பூரில் ஒரு கலவரம் நடந்தால் ? அந்த கலவரத்துக்கு  மணிப்பூர் அரசு பொறுப்பு ஏற்று, அந்த அரசையே கலைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசுகின்றார்கள் என தெரிவித்தார்.