சென்னையை சேர்ந்த சங்கீதா என்பவர் சென்ற 2016-ஆம் வருடம் டப்பிங் யூனியனில் உறுப்பினராக சேர்ந்து சினிமா டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் மே மாதம் நடந்த டப்பிங் சங்கத்தின் 35-வது ஆண்டு பேரவை கூட்டத்தின்போது, பெண் டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக நடிகர் ராதாரவி மீது புகார் பெறப்பட்டது. இதுகுறிர்த்து பாதிக்கப்பட்ட பெண் சங்கீதா விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

இதையடுத்து நடிகர் ராதாரவி, டைரக்டர் கதிரவன் பாலு உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பெண் டப்பிங் கலைஞர் சங்கீதாவை ஆபாசமாக பேசி தாக்கிய புகாரில் ராதா ரவி, டைரக்டர் கதிரவன் பாலு உட்பட 8 பேர் மேல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294-பி ஆபாசமாக பேசுதல், 323 சிறுகாயம் ஏற்படுத்துதல், 354 பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளுதல், 506(2) கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.