இந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 170-வது  திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் உடன் இணைத்து இப்படத்தின் பிரபலங்கள் பற்றிய அறிவிப்பினையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.

மேலும் ரஜினியின் 169-வது படமான இப்படத்தில்  நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றும்  வருகிறது. இந்நிலையில் ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்க உள்ளார். லைகா புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படக்குழு போஸ்டரை வெளியிட்டு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்துள்ளது.