நடிகர்கள் தர்ஷன், ரவி சந்திரன், நடிகை ரச்சிதா ராம் போன்றோர் நடித்த கிராந்தி படம் வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினம் அன்று ரிலீஸ் ஆகிறது. அண்மையில் திரைப்பட விழா ஒன்றில் ரச்சிதா ராம் பேசியதாவது, வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினத்தை மறந்து விடுங்கள். கிராந்தி யோத்வசாவை கொண்டாடுங்கள் எனக் கூறி இருந்தார்.

அவரது பேச்சுக்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் இதுகுறித்து கர்நாடக மாநில அறிவியல் அராய்ச்சி கவுன்சில் தலைவர் சிவலிங்கய்யா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.