
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. இவர் அந்தே சுந்தராணிகி திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தற்போது “தசரா” எனும் படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை டைரக்டர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதோடு பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உட்பட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.
ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக சுதாகர் செருக்குரி தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நானி இப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருக்கும் இணை நடிகரின் போட்டோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு அறிமுகப்படுத்தி உள்ளார். அந்த புகைப்படத்தில் நானி கையில் ஒரு சிறிய கோழி குட்டியை வைத்துள்ளார். இவரின் இந்த பதிவால் ரசிகர்கள் ஷாக் ஆகி கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த கோழியே அவருடன் இணைந்து படத்தில் நடித்து இருப்பதாக அவர் பதிவிட்டு உள்ளார்.
My costar 🙂#Dasara pic.twitter.com/F39m3zAHxi
— Hi Nani (@NameisNani) February 28, 2023