தமிழ் திரைஉலகில் சாக்லேட் பாய்யாக அறிமுகமான  நடிகர் அப்பாஸ் நடிப்பில் வெளியாகிய காதல் தேசம், மின்னலே உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஒருக் கட்டத்தில் சினிமாவை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகிய “காதலுக்கு மரியாதை” படத்தில் தான் நடிக்க வேண்டியது என அப்பாஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது “இந்த படத்தில் என்னை நடிக்க வைப்பதற்காக இயக்குனர் பாசில் தன் மேனேஜரை அணுகியுள்ளார். எனினும் அப்போது இருந்த எனது மேனேஜர் கால்ஷீட் இல்லை என்று அவரிடம் கூறிவிட்டார். படம் வந்த பின்னர் தான் எனக்கு இந்த விஷயமே தெரியவந்தது. ஆகவே  நல்ல படத்தை மிஸ் செய்து விட்டேன்” என்று அப்பாஸ் தெரிவித்தார்.