மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் துவங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு தான் “நான் முதல்வன்” திட்டம். இத்திட்டம் நமது மாநிலத்தில் வருடத்திற்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை தரும் திறன்களை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. திரைப்படம் மற்றும் புகைப்படம் எடுப்பதில் திறமை இருப்பவர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் குறும்படத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாநில அளவிலான போட்டியில் 14 -40 வயதுக்குட்பட்ட அனைவரும் பங்குபெற்று பயன் அடையலாம்.

குறும்படத்துக்கான தலைப்புகள்

# பள்ளிக்கல்வியில் சிறு வயதிலேயே திறன் மேம்பாடு கல்வி பயிற்சி முக்கியத்துவம்

# பாரம்பரியமான திறன்களை டிஜிட்டல் மயமாக்குவது எவ்வாறு இன்றைய சமுதாயத்துக்கு உதவும்..?

# தேசிய இலக்குகளை அடைவதற்கு இளைஞர்களின் சக்தியை தட்டி எழுப்பும் நோக்கத்தில் பயன்படுத்துவதற்கு வேலைவாய்ப்பு திறன்களை வழங்குதல்

# திறன் மேம்பாட்டு கல்விவேலைகளின் எதிர் காலத்தினை எப்படி வடிவமைக்கிறது..?

# டிஜிட்டல் சகாப்தத்தில் திறன்களும், நடைமுறை திறன் பயிற்சியின் முக்கியத்துவமும்

மேற்கண்ட தலைப்பு மற்றும் வரவுகளை உள்ளடக்கிய 6 நிமிடங்களுக்கு மிகாமல் குறும் படங்கள் இருத்தல் வேண்டும். தமிழ் (அ)ஆங்கில மொழிகளிலுள்ள குறும்படங்கள் மட்டும் ஏற்றப்படும். அதன்பின் முதல் பரிசாக ரூபாய்.50,000, 2ம் பரிசாக ரூ.25,000, 3ம் பரிசாக ரூ.10,000 என தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படத்துக்கு  மட்டும் வழங்கப்படும்.

புகைப்பட போட்டிக்குரிய தலைப்பு

# தமிழகத்தில் அழிந்து வரக்கூடிய பாரம்பரிய திறன்கள்

உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் வருகிற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி ஆகும். பங்கேற்பாளர்கள் சமூகஊடகங்களில் இடுகை இடுவதன் வாயிலாக கலந்துகொள்ளலாம் மற்றும் [email protected] எனும் மின் அஞ்சலில் சமர்ப்பிக்கலாம். வெற்றி பெறும் குறும்படதாரர்களுக்கு நான் முதல்வன் திட்டம் (அ) புகழ்பெற்ற படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களுடன் 3 மாத கால இன்டர்ன்ஷிப், வேலைவாய்ப்புகளும் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.naanmudhalvan.tn.gov.in இணையதள முகவரியை பார்க்க வேண்டும்.