திமுக கட்சியில் மு.க அழகிரி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கலைஞர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய உரத்துறை அமைச்சருமான மு.க அழகிரிக்கு திமுகவில் எம்பி சீட் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜனவரி 30-ம் தேதி முக அழகிரியின் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு அவருடைய ஆதரவாளர்களால் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி அமர்க்கள படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் மு.க அழகிரி திமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது. இவருடைய மகன் தயா அழகிரிக்கு தான் எம்பி சீட் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது முக அழகிரிக்கு தான் எம்பி சீட் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வருகிறது.

ஒரு காலத்தில் தென் மாவட்டங்களில் திமுக கட்சியின் பக்கபலமாக இருந்த முக அழகிரி உட்கட்சி பூசலின் காரணமாக கட்சியிலிருந்து விலகி தற்போது அரசியல் வாசம் இல்லாமல் இருக்கிறார். சமீபத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் நடைபெற்ற போது உதயநிதி ஸ்டாலின் முக அழகிரியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்நிலையில் கட்சியின் தலைமைக்கு முக அழகிரியின் மீது இருக்கும் அதிருப்தி படிப்படியாக குறைந்து வருவதால் அவர் மீண்டும் கட்சியில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முக அழகிரியின் ஆதரவாளர்களும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முக அழகிரி இணைய வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.