சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவற்றில் ஒரு சில வீடியோக்கள் மக்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாஜக எம்எல்ஏ ஒருவர் நாய்க்கு பயிற்சி அளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, உத்தரப்பிரதேச மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருபவர் கியான் திவாரி. இவர் தன் வீட்டில் வளரக்கூடிய நாய்க்கு “ராம் ராம்” என்று கூற பயிற்சியளித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.