ஹிமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டம் அருகே சர்க்காகாட் பகுதியில் உள்ள மசேரன் என்ற இடத்தில், ஹச்ஆர்டிசி(HRTC) அரசுப் பேருந்து ஒன்று பள்ளத்தில விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் உயிரிழந்தவர்களில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள். விபத்து நடந்த போது பேருந்தில் 20-25 பேர்வரை இருந்ததாக கூறப்படுகிறது.
VIDEO | Mandi, Himachal Pradesh: HRTC bus falls into gorge, several injured. Rescue operations underway. Injured passengers have been taken to Sarkaghat Hospital.#HimachalPradesh #MandiNews
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/7kLc1sEm54
— Press Trust of India (@PTI_News) July 24, 2025
மண்டி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சாக்ஷி வர்மா கூறியதாவது, விபத்தில் சுமார் 20 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், தற்போது அவர்கள் சர்க்காகாட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
