உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த தகவல் போலியானது எனவும் வெடிகுண்டு ஏதும் இல்லை எனவும் தெரிவித்தனர். மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டை சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு குறித்த தகவல் டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்ததாகவும், முன்னெச்சரிக்கையாக தீவிர சோதனை நடத்தப்பட்டதாகவும் துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) கூறினார். இருப்பினும் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.