தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” எனும் புது திட்டத்தை துவங்கி வைத்து, முதல்கட்டமாக பிப்,.1, 2 ஆகிய தினங்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

ஆய்வின் முதல் நாளான பிப்ரவரி 1ம் தேதி முதல்வர், அப்பகுதிகளிலுள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டறிவார். மேலும் அன்று மாலை 4 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல்துறை சரக துணைத் தலைவர். காவல்துறை தலைவர் (வடக்கு) போன்றோருடன் மேற்படி மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை பற்றி முதல்வர் ஆய்வு மேற்கொள்வார்.