மதுரை விமான நிலையம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 5000-ம் பேர் அதிமுகவில் இணைய இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமை தாங்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 5000 பேர் இணைய இருக்கிறார்கள். இந்த விழா நடைபெறும் இடத்தை ஆர்பி உதயகுமார், மதுரை டாக்டர் சரவணன் உட்பட அதிமுக கட்சியின் நிர்வாகிகள் இன்று பார்வையிட்டனர். அதன்பிறகு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் பேசியதாவது, பிப்ரவரி 5-ஆம் தேதி தைப்பூசத் திருநாளில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைய இருக்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக உள்ள நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 18 மாதங்கள் தாண்டியும் இதுவரை எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. எடப்பாடி யார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற பூத் வாரியாக அதிமுக கட்சியின் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக மாறுவதற்கு இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அச்சாரமாக அமையும். மேலும் எடப்பாடி பழனிச்சாமி நிதி ஒதுக்கி தொடங்கிய திட்டங்களுக்கு தற்போது திமுக அரசு ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறது என்று கூறினார்.