சீன நாட்டின் Hubei மாகாணத்தில் சென்ற 8ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று உள்ளது. பொதுவாக தங்கள் திருமணத்தின்போது முன்னாள் காதலன், காதலியை அழைப்பது மிகவும் குறைவு தான். ஆனால் மணப் பெண் ஒருவர் தனது திருமணத்துக்கு முன்னாள் காதலர்களை வரவழைத்துள்ளார். அவ்வாறு வரவழைக்கப்பட்ட முன்னாள் காதலர்களுக்கு தனியாக Table of Ex Boy friends என்ற இருக்கைகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

இச்சம்பவம் அங்கு கூடி இருந்தவர்களை ஒரு நிமிடம் சிலிர்த்து பார்க்க வைத்தது. அந்த மணப்பெண் தன் வாழ்க்கையை எப்படி தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை காட்டுவதற்காகவே அவர்களை வரவழைத்திருக்கிறார். அதன்பின் மணப்பெண் நினைத்ததை போன்று தனது காதலி மணக் கோலத்தில் கணவருடன் இருப்பதை கண்டு முன்னாள் காதலர்கள் சிலர் வருத்தத்துடன் செல்கின்றனர்.