இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல்குறித்து  இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள்: அடையாளம் தெரியாத நபரிடமிருந்து முகேஷ் அம்பானிக்கு தொடர்ச்சியான மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதன்படி பெறப்பட்ட அனைத்து மின்னஞ்சலும் பணம் கேட்டு மிரட்டியபடியே இருந்தது.  முதல் மின்னஞ்சலில் ₹20 கோடியும், இரண்டாவது மின்னஞ்சல் ₹200 கோடியும், மூன்றாவது மின்னஞ்சலில் ₹400 கோடியும் தருமாறு கேட்டு அனுப்பப்பட்டிருந்தது.

எஃப்ஐஆர் மற்றும் போலீஸ் ஈடுபாடு: ₹20 கோடி கேட்டு முதல் மிரட்டல் மின்னஞ்சல் வந்த பிறகு, மும்பையில் உள்ள காம்தேவி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டது. இது முகேஷ் அம்பானியின்  பாதுகாப்புப் பொறுப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு  செய்யப்பட்டது.

பல அச்சுறுத்தல்கள்: இந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் நான்கு நாட்களில் இதுபோன்று 3-வது முறை நடப்பதாக குறிப்பிட்ட மும்பை காவல்துறை, மின்னஞ்சல்களை அனுப்பியவரைக் கண்டுபிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

முந்தைய மிரட்டல்கள்: முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் அழைப்பு விடுத்ததற்காக பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்த ஒருவரை மும்பை போலீஸார் முந்தைய ஆண்டு கைது செய்ததும், மும்பையில் உள்ள சர் எச் என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடி வைத்து தகர்க்கப் போவதாக அவர்கள் மிரட்டியதும் குறிப்பிடத்தக்கது.