கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி நடத்திய போட்டோ ஷூட் தற்போது இன்ஸ்டாகிராமில் செம டிரெண்டிங்கில் இருக்கிறது. அதாவது கேரளாவில் ஜிபின் ஜாய் என்ற புகைப்பட கலைஞர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சிஞ்சு போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவருக்கு மறக்க முடியாத போட்டோ ஷூட் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என ஜிபின் முடிவு செய்துள்ளார். அதன்படி கர்ப்பிணியாக இருக்கும் தன்னுடைய மனைவி வயிற்றில் ஜிபின் முத்தம் இடுகிறார்.

இதேபோன்று கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து அப்பெண்ணின் பாட்டி வயிற்றில் துணி வைத்து கர்ப்பிணியாக இருக்க தாத்தா நெற்றியில் முத்தமிடுகிறார். அதன் பிறகு ஜிபினின் அம்மா மற்றும் சஞ்சுவின் அம்மாவும் வயிற்றில் துணி வைத்து கர்ப்பிணி போல் இருக்க அவர்களுடைய கணவர்கள் அருகில் நிற்கிறார்கள். இந்த 4 பேரும் சேர்ந்து இருக்கும் போட்டோ தற்போது இணையதளத்தில் படு வைரலாகி வருகிறது. மேலும் இப்படி ஒரு போட்டோ சூட்டை நடத்திய புகைப்பட கலைஞரை அனைவரும் பாராட்டு வருகிறார்கள்.