கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தகழி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தாய் மற்றும் மகள் இருவரும் ஸ்கூட்டியில் தண்டவாளத்தின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் ரயில் வந்ததால் அது ஸ்கூட்டியின் மீது மோதியது.

இதில் தாய் மகள் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் இந்நிலையில் இது தற்கொலையா இல்லையெனில் எதிர்பாராத விதமாக நடந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.