மொராக்கோ அரசு, சீன நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை அறிவித்திருக்கிறது.

சீன நாட்டில் கொரோனா பரவல் தொடர்பில் சுகாதார நிலை மோசமடைந்திருக்கிறது.  இந்நிலையில் அந்நாட்டில் புதிதாக கொரோனா அலையையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் அந்நாட்டு பயணிகள் தங்கள் நாட்டு  எல்லைக்குள் நுழைவதற்கு மொராக்கோ தடை விதித்திருக்கிறது.

இந்த நடவடிக்கையானது, இரண்டு நாடுகளின் மக்களுக்கிடையே இருக்கும் நட்பு மற்றும் இரண்டு நாட்களுக்கு இடையான கூட்டாண்மைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.