இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அதாவது ஒரு வீடியோவில் தாய் பசுமாடு ஒன்று நின்று கொண்டிருக்கிறது. இந்த தாய் பசு மாடுவிடம், குட்டி மாடு பால் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறிய மாடு குட்டியின் மேலே அமர்ந்தது. இதனால் குட்டி பசுமாடு மூச்சு விட முடியாமல் திணறியது. இதனை பார்த்தவர்கள் உடனடியாக வந்து தாய் மாட்டை எழுப்ப முயற்சி செய்தனர்.
சிறிது நேரம் கழித்து தாய் மாடு தானாகவே எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
