மும்பையின் காட்கோபர் (Ghatkopar) பகுதியில், 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது சொந்தத் தாயே பக்கத்து வீட்டுக்காரரின் உதவியுடன் தன்னை பாலியல் தொழிலில் (Prostitution) ஈடுபடக் கட்டாயப்படுத்தியதாகக் கூறிப் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பணம் சம்பாதிப்பதற்காக இருவரும் சேர்ந்து தன்னை இதில் ஈடுபடுத்தியதாக அந்தச் சிறுமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

துன்புறுத்தல் தாங்காமல் போன நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தன் வகுப்பு ஆசிரியரிடம் (School Teacher) சென்று, “அம்மாவும் மாமாவும் என்னைப் பாலியல் தொழில் செய்யக் கட்டாயப்படுத்துகிறார்கள்” என்று கூறி நடந்த கொடுமைகளைக் கண்ணீருடன் விவரித்துள்ளார்.

ஒரு முறை வீட்டை விட்டு ஓடிச் சென்று நண்பர் வீட்டில் தங்கிய பின்னரும், தாயால் கடுமையாகத் தாக்கப்பட்டு மீண்டும் இந்தச் செயலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதன் தீவிரத்தைப் புரிந்துகொண்ட பள்ளி நிர்வாகம், உடனடியாகப் போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளது. சிறுமியின் தாயார் மற்றும் பக்கத்து வீட்டு நபர் மீது இந்திய நீதி சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ (POCSO) சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.