செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து தனது ஆழ்ந்த கவலையை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தியுள்ளார். இந்த தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்களின் நம்பகத்தன்மையை உறுதி  செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இதுபோன்ற போலி வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் பலர் நம்பும் அபாயகரமான போக்கை எடுத்துரைத்த பிரதமர் மோடி தானே பாதிக்கப்பட்டதாகவும்  தெரிவித்த அவர்,

கர்பா நடனத்தில் தான் நடனமாடுவது போன்ற  கையாளப்பட்ட வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார். பிரதமரின் இந்த கருத்துக்கள் தவறான தகவல்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும், AI மற்றும் Deepfake தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாட்டைச் சமாளிக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளின் அவசரத் தேவையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.