மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சா புதுமையான பிரச்சார அணுகுமுறையைக் கடைப்பிடித்ததால், அரசியல் களம் ஒரு அசாதாரண சம்பவத்தைக் கண்டுள்ளது. அதன்படி,வேட்பாளர் சக்லேச்சா, சாலையோரத்தில் வசிக்கும் ஒருவரிடம் செருப்பை வழங்கியபோது,

அதை எடுத்து சக்லேச்சாவின் கன்னத்திலும் தலையிலும் அடித்து அந்த நபர் ஆசீர்வாதம் செய்வதும்,அதை வேட்பாளர் அமைதியாக வாங்கி கொள்வதும் அங்குள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, தேர்தல் கதையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருவிதமான பிரச்சார யுக்தி என நெட்டிசன்கள் இது குறித்து சமூக வலைத்தளங்களில் தங்களது  கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.