மிசோரமின் மூத்த பெண்மணியான லால்நெய்ஹ்சாங்கி (108), வயது மூப்பு காரணமாக ஐசால் நகரில் உள்ள எபினேசர் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு 7.55 மணியளவில் காலமானார்.
‘பி புவாங்கி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர், செப்டம்பர் 13 அன்று மிசோரம் மாநிலத்தின் மிக வயதான நபராக சமூக நலத்துறை அமைச்சர் லால்ரின்புயியால் அறிவிக்கப்பட்டார்.
ஐசால் நகரின் காட்லா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி ‘Women of Substance’ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
ஐசாலின் வெங்லூய் பகுதியில் பிறந்து வளர்ந்த லால்நெய்ஹ்சாங்கி, கடந்த ஏப்ரல் 14 அன்று தனது 108வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கொல்கத்தாவில் உள்ள பெஹாலா கேர்ள்ஸ் ஹோமில் பணியாற்றிய முதல் மிசோ பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர்.
இந்தப் பணி அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. அவரது சேவை மனப்பான்மையும், சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பும் அவரை மிசோரமின் மறக்க முடியாத ஆளுமையாக மாற்றியுள்ளது.
