திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருமங்கலம் கோபால் கட்சிக்காக உழைத்து… கட்சிக்காக பாடுபட்டு…. பணியாற்றி… தொண்டாற்றி.. பல தியாகங்களை செய்து…. எப்பொழுது ஒரு மிடுக்காக  தான் இருப்பார். அந்த மிடுக்கு  தான் இப்பொழுதும் இந்த கழகத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை  யாரும் தயவு செய்து மறந்துவிடக்கூடாது.

முதல் முதலில் இளஞரணி அணி  அமைப்பை….  திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துணை அமைப்பாக  ஒன்று உருவாக்க வேண்டும் என்று தலைமை கழகம்…..  தலைவர் கலைஞரும்,   நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியரும் முடிவு செய்தது, அதை துவைக்கினார்கள்….  அது துவங்கிய காலத்தில் இருந்து தொடர்ந்து நகர பகுதிகள்… ஒன்றிய பகுதிகள்… கிராமப் பகுதிகள்…. ஊராட்சி பகுதிகள்… பேரூராட்சி பகுதிகள்…. மாநகராட்சி பகுதிகள்….

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். அந்த சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன் என்றால், அதில்  குறைந்தபட்சம் 30 சதவீதம் அவர் என்னோடு துணை வந்தவர். எனக்கு பாதுகாப்பாக துணை இருந்தவர்.

அதற்கு பிறகு தான் 1975இல் நெருக்கடியான கால நேரத்தில் தான் தலைவரோடு நெருங்கி….. பாதுகாப்பாக இருக்க கூடிய சூழல் ஏற்பட்டது. அதிலிருந்து 2005 வரை.. கலைஞர் உயிர் பிரிகின்ற  கடைசி வரை துணையாக இருந்து பணியாற்றிய ஒரு தியாகச் செம்மல் தான் நம்முடைய திருமங்கலம் கோபாலன் என்பதை பெருமையோடு தெரிவிக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார்.