தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, திமுக உடைய எந்த அமைச்சருமே தமிழக மண்ணிலே நல்லது செய்வதற்கு ஒரு அமைச்சருமே  இங்கு கிடையாது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே திருடர்களை  போல் நடந்து கொண்டால்  தமிழக மக்களை யார் காப்பாற்ற போகின்றார்கள்? எப்பவுமே ஒரு திருடன் ஒரு போலீஸ் இருப்பான். ஒரு திருடனுக்கு ஒரு போலீஸ்…

ஆனால் இன்னைக்கு  தமிழகத்தினுடைய  காவல்துறையின்னுடைய மாண்பை  கெடுத்து,  ஒரு திருடனை பாதுகாப்பதற்காக தமிழக காவல்துறையை முதலமைச்சர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால் ?  அவருடைய ஆட்சி யாருக்காக இருக்கிறது ?  அந்த ஆட்சி என்பது தமிழகத்தில் இருக்கக்கூடிய எட்டரை கோடி மக்களுக்கு இருக்கிறதா ? ஒரே ஒரு  ஊழல்வாதியை காப்பாற்றுவதற்காக இந்த ஆட்சி இருக்கிறது.  எல்லா அமைச்சர்களும் நைட் 2:30 மணிக்கு போறாங்க.

ஏங்க தமிழ்நாட்டுல எத்தனை இடத்துல வெள்ளம் வருது….  யாராச்சும் வந்து பாத்தீங்களா ? 22 பேர் கள்ள சாராயத்தில் இறந்தாங்க. மூணு நாள் கழிச்சு போய் பாத்தீங்க. எத்தனை நாள் தினமும் நம்முடைய பெண்களின் மீது ஏதோ ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கு யாருமே ஏன்னு கேக்குறதில்ல …

ஒரு ஊழல் அமைச்சர்….  ஊழல்வாதியை பார்ப்பதற்கு நைட் 2:30 மணிக்கு எல்லா அமைச்சர்கள் வரிசை கட்டி இருக்கிறார்கள். உடனே முதலமைச்சர் சொல்லுவார். எங்க அப்பன் குதிரைக்குள்ள இல்ல என்று முதலமைச்சர் அடிக்கடி சொல்லுவார். அதாவது ஆட்சி அதிகாரத்திலேயே என்னுடைய குடும்பம் இல்லை என்று முதலமைச்சர் சொல்லுவார்.

முதலமைச்சரோட மருமகன் காலையில  வேகமாக ஓடுறார். எங்க போற நீன்னு கேட்டா ? அமைச்சர பாக்க போறேன்…. அப்படி இருக்கும் போது தமிழக மக்களுக்கு உண்மை வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. முதல்வர் மு.க ஸ்டாலினை பொருத்தவரை அவருடைய ஆட்சி என்பது ஒரு குடும்பத்திற்கும்,  ஒரு அமைச்சருக்கு மட்டும் தான் இருக்கிறது… வேறு யாருக்குமே அந்த ஆட்சி இல்லை சகோதர, சகோதரிகளே என தெரிவித்தார்.