இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். இவர் தற்போது கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இந்நிலையில் கௌதம் கம்பீர் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தேர்வாளரின் காலில் விழாததால் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தற்போது கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு 12, 13 வயது இருக்கும் போது அண்டர் 14 தொடர் வந்தது. அந்தத் தொடரில் தேர்வாளரின் காலை நான் தொடாததால் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் அன்று முதல் நான் யாருடைய காலையும் தொட்டு வணங்க கூடாது என்று எனக்கு நானே உறுதி எடுத்துக் கொண்டேன். அதேபோன்று என்னுடைய காலையும் யாரும் தொட்டு வணங்க கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். நான் அண்டர் 16, அண்டர் 19, ராஞ்சி கோப்பை அல்லது என்னுடைய கேரியரின்  ஆரம்பத்தில் ஒவ்வொரு முறையும் நான்  தோல்வியடையும் போது நீங்கள் தேவையில்லாத குடும்பத்தில் இருந்து வந்துள்ளீர்கள் என்று என்னை பேசுவார்கள். அதோடு என்னிடம் உங்கள் அப்பாவின் தொழிலுக்கு சென்று விடுங்கள் என்று கூறுவார்கள். அதுதான் என் தலையில் தொங்கிக் கொண்டிருந்த மிகப்பெரிய கருத்து. மேலும் இதையெல்லாம் தாண்டி தான் நான் வெற்றி பெற்றுள்ளேன் என்று கூறியுள்ளார்.