ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர் சேன் வாட்சன். இவர் தற்போது 2016 ஆம் ஆண்டு பெங்களூரு அணி கோப்பையை வெல்லாவதற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணி 208 ரன்கள் எடுத்த நிலையில், பெங்களூர் அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசிய வாட்சன் விக்கெட் எதுவும் எடுக்காமல் 61 ரன்கள் விட்டுக் கொடுத்ததோடு பேட்டிங்கிலும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தோல்வி குறித்து தற்போது பேசிய வாட்சன், நான் அன்றைய தினம் நன்றாக விளையாட வேண்டும் என்று தயாராக இருந்தேன். அது என்னுடைய சிறப்பான ஆட்டமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அதுவே என்னுடைய மோசமான ஆட்டமாக அமைந்துவிட்டது. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் அந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக வாட்சன் 20 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.