300 நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது..

300 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை -விலையை கட்டுப்படுத்த முதலமைச்சர். மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி குறைவான விலையில் தக்காளி விற்க ஏதுவாக மேலும் 300 ரேஷன் கடைகளுக்கு திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் பண்ணை பசுமை அங்காடிகளில் கூடுதலாக தக்காளி, சிறிய வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பை குறைவான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..

அதேபோல நடமாடும் காய்கறிகள் அங்காடிகள் வாயிலாக நகரப் பகுதிகளில் காய்கறி விற்பனை செய்யப்படும்.
மாநிலம் முழுவதும் செயல்படும் உழவர் சந்தைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிச்சந்தை விலை கட்டுப்பாடு நடவடிக்கையாக பருப்பு வகைகளை கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்..

முன்னதாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின்  11.30 மணி அளவில் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.