அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள்  காணொளி காட்சி மூலமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் தமிழகத்தினுடைய முதல்வரும், திமுக கட்சியினுடைய தலைவரும் ஆலோசனை வழங்க இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் கூட்டணி கட்சியுடன் எப்படி இணைந்து பணி செய்வது என்பது தொடர்பாகவும் அவர்களுக்கு தேவையான ஆலோசனையையும் வழங்குவதற்கான  பணிகளையும் தொடர்ந்து செய்யக்கூடிய சூழல் இருக்கிறது.

விரைவில் திமுக உடைய பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. இது போன்று பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட இருக்கிறது.திமுகவை பொருத்தவரை ஐந்து பேர் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். கூடுதலாக இரண்டு பேரை நியமிக்க திட்டமிட்பதாக தெரிகிறது.

குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஏ.வா வேலு அவர்கள் துணைப் பொதுச் செயலாளராக வருவதற்காக அதிக வாய்ப்புகள் இருக்கிறதாக கூறப்படுகிறது. முன்னாள் மத்திய இணைய அமைச்சர், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அவருக்கும் கொடுக்கப்படுவதற்காக வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக திமுக உடைய செயல்பாடுகளை…

திமுக உடைய தேர்தல் பணிகளை… எப்படி கையாள்வது ? திமுக உடைய செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் ? ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கக்கூடிய முரண்பாடுகளை தவிர்த்து,  எப்படி தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை தமிழகத்துடைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வழங்க இருக்கிறார்.