சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகர் வேர்க்கடலை சாமி தெருவில் 50 அடி உயரமுள்ள பழமையான புங்கமரம் அமைந்துள்ளது. நேற்று மாலை அந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்து சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான மினி லோடு வேன் மீது விழுந்தது. இதனால் லோடு வேன் சேதமானது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். மரம் விழுந்த நேரம் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.