சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடல் அலையில் கால்களை நனைக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பகல் நேரத்தில் முதியவர்கள் மற்றும் கை குழந்தையுடன் வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பகல் நேரத்தில் வருபவர்கள் மணல் பகுதியை கடந்து செல்வதற்காக 3 சக்கர பிளாஸ்டிக் வண்டி விவேகானந்தர் இல்லம் அருகே இருக்கும் அணுகு சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு சென்று இலவசமாக வண்டிகளை பெற்றுக் கொண்டு கடல் அலை இருக்கும் பகுதி வரை சென்று வரலாம்.

இதற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் வண்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே இருக்கும் வண்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.