தமிழ் திரையுலகில் ரன் திரைப்படம் வாயிலாக மிகவும் பிரபலமடைந்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர் புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து ஆகிய பல்வேறு பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக 2014ல் வெளியான விஞ்ஞானி எனும் படத்தில் நடித்தார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பின் மீரா ஜாஸ்மின் பல்வேறு திரைப்படங்களை கைவசம் வைத்து உள்ளார்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் “விமானம்” படக்குழுவானது மீரா ஜாஸ்மினுக்கு வாழ்த்து கூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதோடு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த படம் வாயிலாக மீரா ஜாஸ்மின் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.