விக்னேஷ் சிவன் டைரக்டில் அஜித் நடிப்பதாக கடந்த வருடம் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட படத்திற்கு ஏகே-62 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. மும்முரமாக நடந்து வந்த ஏகே-62 படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கடந்த மாத இறுதியில் நிறுத்திவைக்கப்பட்டது. ஏனெனில் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இப்போது அவருக்கு பதில் மகிழ்திருமேனி படத்தை இயக்கபோவதாக கூறப்படுகிறது.

அதாவது, விக்னேஷ் சிவன் எழுதிய கதையானது அஜித் மற்றும் லைக்காவுக்கு பிடிக்காததால் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது புது தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ளது. அதன்படி ஏகே-62 திரைப்படத்தில் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைப்பதற்கு விக்னேஷ் சிவன் முடிவு செய்திருந்தார். எனினும் திரிஷாவுக்கு கைகொடுக்குமாறு லைக்கா கேட்டபோது, இல்லை என விக்கி கூறியுள்ளார்.

அதன்பின் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராய் ஆகிய நடிகைகளையும் லைக்கா பரிந்துரை செய்தது. இருப்பினும் அவர்கள் அனைவரையும் விக்னேஷ் நிராகரித்தார். இதனிடையே விக்னேஷ் சிவன் நயந்தாராவை நாயகியாக வற்புறுத்தியதை அடுத்து, கடுப்பான லைகா நிறுவனமும், அஜித்தும் இது தீராது என முடிவெடுத்து விக்கியை படத்திலிருந்து நீக்க முடிவுசெய்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.