வந்தே பாரத் ரயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார். அதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இருந்து சீரடிக்கு பயணித்தவருக்கு தூசி நிறைந்த கார்ன் பிளேக்ஸ் வழங்கப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. அண்மையில் இதேபோன்று வந்தே பாரத் ரயிலில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.