இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரும் சோஹோ நிறுவன தலைவருமானவர் ஸ்ரீதர் வேம்பு. இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். இந்திய பணக்காரர்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கிறார். இவர் உயர்கல்வி பெறாத கிராமப்புற மாணவர்களுக்காக தொழிற்சார் மென்பொருள் மேம்பாட்டு கல்விக்காக சோஹோ பள்ளிகளை நிறுவியுள்ளார். இவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 20% பேர் கல்லூரிகளில் பட்டம் பெறாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது காலை உணவாக பழைய சோறு மாறிவிட்டதாக ஸ்ரீதர் வேம்பு பிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எரிச்சலுடன் குடல் பிரச்சினை என்னும் ஐபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை எடுத்துக் கொள்கின்ற நிலையில் அந்த நோய்க்கு எளிதான மருந்தாக இதனை அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, சில ஆண்டு காலமாக என்னுடைய காலை உணவாக பழைய சோறும் மாறி உள்ளது. எனது பாரம்பரிய முறையில் இந்த உணவை நான் எடுத்துக் கொண்டுள்ளேன். எனக்கு பல காலமாக எரிச்சலுடன் குடல் பிரச்சினை நோய் இருக்கிறது. ஆனால் தற்போது அந்த நோய் குணமடைந்துள்ளது. ஒருவேளை இந்த பதிவு சிலருக்கு உதவலாம் என்று பதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.