நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக மாநில-மத்திய அரசுகளுக்கு இடையில் சச்சரவுகள் எழும் என்ற கவலைகளும் அதிகரித்து உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு அதிகளவு ஓய்வூதியம் கிடைக்கும் எனில், அரசுக்கு சுமை அதிகரிக்கும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியமானது கிடைக்கும். இதன் கீழ் 1 ஊழியருக்கு இறுதியாக எடுக்கப்பட்ட சம்பளத்தில் 50% தொகையை ஓய்வூதியமாக பெறுவதற்கு உரிமையுண்டு. ஆனால் புது ஓய்வூதிய திட்டத்தில் இந்த பண பலன்கள் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஒருசில மாநில அரசுகளானது தன் ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்தி இருக்கிறது. மேலும் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் மாநிலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி புது ஓய்வூதிய திட்டத்தின் பணத்தை பழைய ஓய்வூதியத்திற்காக மாநில அரசுகளுக்கு வழங்கமுடியாது என திட்டவட்டமாக தெளிவுபடுத்தி விட்டார். இலவச திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநிலங்கள், நிதிச்சுமையை வேறொருவர் மீது சுமத்த நினைப்பது தவறானது என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துவிட்டார்.