இப்போது அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக புது ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து மீண்டுமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என தொடர்ந்து பல வழிகளில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் தங்களின் ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்து உள்ளனர். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் ஓய்வூதிய முறையில் மறு பரிசீலினை செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இந்த குழு புது ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை சேர்ப்பது குறித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றவேண்டுமா என்பது குறித்தும் ஆராய்ந்து பரிசீலனைகளை வழங்கும். இக்குழுவிடம் பெறப்பட்ட பரிந்துரைகளின் படி ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என  நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மீண்டுமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளதால் இந்த குழு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த பரிந்துரை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. இதன் காரணமாக மீண்டும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.