தமிழகத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெற்றிருக்கும் இந்த வெற்றியானது, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றியை விட மிகப்பெரியது என்று அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். சுமார் 35 அரசியல் கட்சிகளைத் தனது தனித்துவமான செல்வாக்கின் மூலம் விஜய் தோற்கடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், த.வெ.க-வுடன் கூட்டணி வைக்காதது காங்கிரஸ் கட்சி செய்த மிகப்பெரிய தவறு என்றும் அவர் சாடியுள்ளார். “50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் இத்தகைய பொன்னான வாய்ப்பை காங்கிரஸ் தவறவிட்டுவிட்டது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த விஸ்வரூப வெற்றியைப் பார்த்துப் பல ஜாம்பவான் கட்சிகளே ஆடிப்போயுள்ள நிலையில், ஒரு காங்கிரஸ் நிர்வாகியே விஜய்யின் வெற்றியை எம்.ஜி.ஆரின் வெற்றியுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது த.வெ.க தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
