
தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலரும் தங்களுக்கென ஒரு பட்டத்தை வைத்திருப்பது வழக்கம் தான். அதன்படி தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் நடிகரான எம் ஜி ராமச்சந்திரனின் புரட்சித்தலைவர், நடிகர் விஜயின் தளபதி ஆகிய பட்டங்களை இணைத்து புரட்சி தளபதி என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஷால். அவர் தற்போது எம்ஜிஆரின் புகைப்படத்தை தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான விஷால் மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் அவரைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். நிலையில் எம்ஜிஆரை பச்சை குத்தி இருப்பதால் விஷால் அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளார் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
*புரட்சி தலைவர் எம். ஜி.ஆர் படத்தை தன் நெஞ்சில் பச்சைகுத்தி இருக்கும் நடிகர் விஷால் அவர்கள்* #Vishal @VishalKOfficial @HariKr_official @VffVishal #MGR pic.twitter.com/AmmqIsook5
— Nikil Murukan (@onlynikil) January 24, 2023