பிக்பாஸ் சீசன்-6 பைனல் நேற்று முன்தினம் நடந்து முடிந்துள்ளது. பைனலிஸ்ட்டாக விக்ரமன், அஸீம் மற்றும் ஷிவின் போன்றோர் இருந்தனர். இந்நிலையில் முதலில் ஷிவின் எலிமினேட் ஆனார். இதையடுத்து விக்ரமன் மற்றும் அசீம் இருவரில் யார் வெற்றியாளர் என்பதை கமல் அறிவித்தார். அதாவது, அஸீம் கையை தூக்கி வெற்றியாளராக அறிவித்தார் கமல். இந்நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக பைனலுக்கு சென்ற விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் ஆகியோர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி, நாளொன்றுக்கு விக்ரமன் ரூ.18 ஆயிரம் என பேசப்பட்டு  வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. 105 நாட்கள் கணக்கு வைத்து பார்த்தால் அவருக்கு ரூபாய்.18 லட்சம் சம்பளம் கிடைத்திருப்பதாக தெரிகிறது. ஷிவினும் இதே சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு தான் வீட்டிற்குள் நுழைந்து உள்ளார். அசீம் நாளொன்றுக்கு ரூ.25 ஆயிரம் பேசப்பட்டு 105 நாட்களுக்கு ரூ.25 லட்சம் வாங்கியிருப்பதாக தெரிகிறது.