நடிகர் ராதாரவியின் வித்தியாசமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கமல் நடிப்பில் கே.பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மன்மத லீலை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் ராதாரவி. இவர் வில்லன், கதாநாயகன், நகைச்சுவை நடிகர், குணசத்திர நடிகர் என தனக்குள் பன்முக தன்மைகளை கொண்டவர். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவரின் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் நேற்று முன்தினம் சோசியல் மீடியாவில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. அந்த புகைப்படத்தில் அவர் வில்லன் போன்று கோட் சூட் அணிந்து இருக்கின்றார். இதற்கு தற்போது லைக்குகள் குவிந்து பலரின் கவனத்தையும் இந்த புகைப்படம் ஈர்த்து வருகின்றது. ராதாரவியின் பேத்தி ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இவரின் நீண்ட நாள் ஆசையான தனது தாத்தா ராதாரவிக்கு ஆடை வடிவமைத்து தந்திருக்கின்றார். தனது பேத்தியின் ஆசைக்காக இந்த உடையை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கின்றார் குறிப்பிடத்தக்கது.