தளபதியின் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி வெளியான நிலையில், தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனினும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் தமிழகத்தில் கிடைத்துள்ள அதே வரவேற்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே கேரளா வசூலில் வாரிசு திரைப்படம் தோல்வியை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தனர்.

தற்போது கஃல்ப் நாடுகளில் இதுவரையிலும் வாரிசு படம் 12.5 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இருப்பினும் இதுவரை லாபத்தை எட்டவில்லை என தெரியவந்துள்ளது. இதன் வாயிலாக கண்டிப்பாக வாரிசு படம் கஃல்ப் நாடுகளிலும் தோல்வியை தழுவ அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகின்றனர். வசூலில் பட்டையை கிளப்பும் விஜய்யின் படத்துக்கே இந்த நிலைமையா என பேசப்பட்டு வருகிறது.