16-வது IPL கிரிக்கெட் தொடர் அகமதாபாத்தில் சென்ற 31-ஆம் தேதி துவங்கியது. இதுவரையிலும் 5 போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 6-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது. இந்நிலையில் IPL போட்டிகளை பார்க்க மெட்ரோ நிர்வாகமானது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் IPL போட்டிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எல்இடி டிவிகள் வாயிலாக ரயில் நிலையம் உள்ளே IPL போட்டி ஒளிபரப்பப்படுகிறது. வடப ழனி விம்கோ நகர், சென்ட்ரல், நந்தனம், திருமங்கலம் போன்ற பகுதிகளில் ரூ.10 கட்டணம் செலுத்தி போட்டிகளை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.