வங்காளதேசத்தில் வசித்து வருபவர் ஷர்மீன் அகீ(27). இவர் சின்சியர்லி யுவர்ஸ், டாக்கா, பைஷே ஸ்ரபோன் மற்றும் பாண்டினி ஆகிய படங்களில் நடித்ததன் வாயிலாக வங்காளதேச சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் புதியதாக நடித்து வரும் படத்தின் சூட்டிங் மிர்பூர் பகுதியில் நடந்து வந்தது.

அப்போது ஷர்மீன் அகீ இருந்த மேக்கப் அறையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் அவருக்கு கைகள், கால்கள், மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையில் ஷர்மீனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.