லியோ திரைப்படத்தின் கதை குறித்து பேசப்பட்டு வருகின்றது.
வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்த இத்திரைப்படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது. புரோமோவில் விஜய் சாக்லேட் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு பக்கம் இரும்பு பட்டறையில் வாள் ஒன்றை செதுக்குக்கின்றார். இதற்குப் பின்னால் சிலுவை படமும் இருக்கின்றது. இதனால் விஜய் இரண்டு வேடத்தில் நடக்கின்றாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. விஜயை ப்ரோமோவில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று தேடுகின்றது. அந்த கும்பல் அவரை நீ நெருங்கி வந்ததும் சாக்லேட்டில் முக்கி அந்த வாலை எடுத்து பிளடி ஸ்வீட் என்கின்றார்.
மேலும் திரைப்படத்தின் ரிலீஸ் வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கைதி, விக்ரம் திரைப்படங்களில் லோகேஷ் கனகராஜ் தமிழ்நாடு அளவிலான போதை பொருட்களை பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் காஷ்மீரில் படம் ஆக்கப்பட உள்ளது. இந்தியா அல்லது சர்வதேச அளவிலான போதைப்பொருள் பற்றிய திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகின்றது. மேலும் போதை சாக்லேட்டுகள் குறித்த செய்திகள் அடிக்கடி வரும் நிலையில் அதை சாப்பிட்டு திரைப்படமாக எடுக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.