சமூக வலைதளங்களில் ஒரு யானையின் குறும்புத்தனமான வீடியோ பயங்கர வைரலாகி, பார்ப்பவர்களின் மனதை குதூகலப்படுத்தி வருகிறது. 12 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு சிறுமியுடன் யானை மகிழ்ச்சியாக விளையாடுவது பதிவாகியுள்ளது.

யானைகள் கூட்டமாக நீரில் நிற்க, கரையில் பலர் கூடியிருக்கின்றனர். அவர்களில் ஒரு சிறுமி யானையின் அருகில் நிற்க, அந்த யானை தன் துதிக்கையில் தண்ணீரை உறிஞ்சி, சரியான கோணத்தில் சிறுமி மீது தெளிக்கிறது.

இந்த குறும்பு செயல், யானைகளின் புத்திசாலித்தனத்தையும், விளையாட்டுத்தனத்தையும் வெளிப்படுத்தி, பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.

இந்த வீடியோ எக்ஸ் கணக்கில் “யானை சரியான கோணத்தை கணக்கிட்டு தண்ணீர் தெளித்தது” என்ற தலைப்புடன் பகிரப்பட்டு, 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 45,000-க்கு மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.

நெட்டிசன்கள், “யானைகளும் இவ்வளவு குறும்புத்தனமாக இருக்குமா?”, “இவ்வளவு புத்திசாலித்தனமாக யானைகள் செயல்படும் என யாருக்குத் தெரியும்?”, “இந்த யானைக்கு நிச்சயம் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்!” என பலவிதமான கமெண்ட்ஸை பதிவிட்டு மகிழ்ந்துள்ளனர். யானைகளின் அன்பான, மென்மையான தன்மையை இந்த வீடியோ எடுத்துக்காட்டுவதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.